`படத்தில் கூறப்பட்டவை அனைத்தும் உண்மைதான்!’ - `டிராஃபிக்’ ராமசாமி நெகிழ்ச்சி

மதுரை யாழ்சத்திரம் பகுதியில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் டாஸ்மாக் கடை அமைப்பதைத் தடுக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார், டிராஃபிக் ராமசாமி .

மதுரை

மதுரை யாழ்சத்திரம் பகுதியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் டாஸ்மாக் கடை அமைப்பதாகவும் அதைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் டிராஃபிக் ராமசாமி புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “ மதுரை யாழ்சத்திரம் பகுதியில் ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் டாஸ்மாக் கடை அமைப்பதாகத் தெரியவந்தது. அது தொடர்பாகவும், மதுரையில் ஷேர் ஆட்டோக்கள் போலியான ஆவணங்களுடன் ஓடுவது பற்றியும்  மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன். புகாரைப்பெற்றுக்கொண்டவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கக் கூறினார். அதைப் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். ஷேர் ஆட்டோ குறித்த புகாருக்கு, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கான விழிப்புஉணர்வை செய்தித்தாள்களில் விளம்பரமாகக் கொடுப்பதாகவும் கூறினார். பொதுமக்கள், எந்த ஒரு புகாராக இருந்தாலும் என்னிடமே கொடுக்கச் சொல்லுங்கள்; அச்சம்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார்.”

பின்னர், அவரது வாழ்க்கை பற்றி வெளிவந்த திரைப்படத்தைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது " படத்தில் கூறியவை அனைத்தும் உண்மைதான். நன்றாக எடுக்கப்பட்டுள்ளது என சினிமா விமர்சகர்கள் என்னிடம் தெரிவித்தனர், மகிழ்ச்சியாக இருந்தது என நெகிழ்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!