வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (09/07/2018)

கடைசி தொடர்பு:21:35 (09/07/2018)

`தேவைக்கு அதிகமாக மருந்து கொள்முதல்’ - அரசு மருத்துவமனையால் ரூ.16.17 கோடி இழப்பு!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, தேவைக்கு அதிகமாக மருந்துகளைக் கொள்முதல் செய்ததால், அரசுக்கு 16.17 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை


சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், நாள்தோறும் ஏராளமான உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சென்னையைச் சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் மேல் சிகிச்சைக்காக இங்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இங்கு வரும் நோயாளிகளுக்கு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மருத்துவமனைக்குத் தேவையான மருந்துப்பட்டியல்களை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். தமிழ்நாடு மருத்துதுவப் பணிக் கழகம் இதை விநியோகிக்கிறது. மருத்துவக்கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை மருந்து கொள்முதல் செய்ததில், அரசுக்கு சுமார் 16.17 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஆண்டுத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக அளித்த மருந்துகளின் தேவைப்பட்டியல் மற்றும் கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு  மருத்துவப்பணிக்கழகத்தின் தோல்வியே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.