நிவின் பாலி, மோகன்லால் இணைந்து நடிக்கும் பிரமாண்டமான வரலாற்றுப் படத்தின் டிரெய்லர்! #KayamkulamKochunni

 

காயன்குளம் கொச்சுண்ணி'

19-ம் நூற்றாண்டில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாழ்ந்த கொச்சுண்ணி என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகவைத்து, நிவின் பாலி நடித்திருக்கும் 'காயன்குளம் கொச்சுண்ணி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. மலையாள சினிமாவின்  முன்னணி நடிகரான மோகன்லால், டிரெய்லரை இணையத்தில் வெளியிட்டார். பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தில், அவரும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நிவின் பாலி, ப்ரியா ஆனந்த் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியிருக்கிறார்; கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

கேரளாவில், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் காயன்குளம் என்ற ஊரில் பிறந்த கொச்சுண்ணி, செல்வந்தர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளிடம் கொடுத்துவந்ததால், அந்தப் பகுதியினரால் ஒரு ஹீரோவாகப் பார்க்கப்பட்டார். அவர் எப்படி திருடனாக மாறினார், அதற்கு முன்பு அவர் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது தொடங்கி, அந்தக் காலகட்டத்தில் நிலவிய சமூகக் கட்டமைப்புகளையும் இந்தப் படம் தெளிவாகக் கூறும் என்று இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறியிருக்கிறார். வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படம், மிகப்பெரும் செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!