வைகைக் கரை தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை!

மதுரை வைகையின் தென்கரை ஓரத்தில், ஆளும் கட்சி வட்டச்செயலாளரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை மீட்க வேண்டுமென்று டிராஃபிக் ராமசாமியின் உதவியாளரான பாத்திமா பீவி என்பவர், அப்பகுதி மக்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். 
   

வைகைக் கரை

இதுகுறித்து அவர் கூறும்போது, ''வைகையின் தென்கரையில், லாலா சத்திரம் என்ற பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் 60-க்கு 30 என்ற அளவில் ஆளும் கட்சியின் 82-வது வட்டச் செயலாளர் தேவதாஸ் என்பவர், தகர ஷெட்டுகள் போட்டு ஆக்கிரமித்துள்ளார். இவரின் மனைவி,  மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்தவர். இந்த இடத்தில் டாஸ்மாக் பார் கொண்டுவரப்போவதாகச் சொல்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட இந்த லாலா சத்திரத்திலிருந்துதான் சித்திரைத் திருவிழாவின்போது, திக் விஜயத்துக்கு மீனாட்சி அம்மனுக்கு சீர் கொண்டுசெல்வார்கள். சித்திரைத் திருவிழாவுக்கு வரும் பல கிராமத்து மக்கள் இங்கு கூடி இருப்பார்கள். பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்பு, மஞ்சளை விவசாயிகள் இங்குதான் வியாபாரம் செய்வார்கள். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இந்த இடத்தில் கால்வாயையும், மற்ற பகுதிகளையும் ஆக்கிரமித்திருப்பதை அதிகாரிகள் பார்வையிட்டு உடனே  அப்புறப்படுத்த வேண்டும்'' என்றார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!