மூச்சுக் குழாயில் சிக்கிய இரும்பு நட்டு..! அறுவை சிகிச்சை செய்து நீக்கிய அரசு மருத்துவர்கள்

ஆந்திராவைச் சேர்ந்த முதியவரின் சுவாச குழாயிலில் சிக்கியிருந்த இரும்பு நட்டு: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றம்!

ந்திரா மாநிலத்தைச் சேர்ந்த முதியவரின் சுவாசக் குழாயில் மாட்டியிருந்த இரும்பு நட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தனியார் மருத்துவமனைகள் கைவிரித்த சிக்கலான அறுவைச்சிகிச்சையை வெற்றிகரமாக செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோஜப்பா, இவருக்கு வயது 54. கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதியன்று வழக்கம்போல வேலைசெய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இரும்பு நட்டை  விழுங்கி விட்டார். அது அவருடைய மூச்சுக்குழாயினுள் சென்றதால் வறட்டு இருமலால் அவதிப்பட்டு வந்தார். அதையடுத்து சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எங்கும் தீர்வு கிடைக்கவில்லை.

ஜோஜாப்

இதனிடையே கடந்த 26-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுவாச குழாயில் சிறிய இரும்பு துண்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், அவருக்கு 'ட்ரக்கியோஸ்டோமி' (Tracheostomy) மூலம் அந்த நட்டை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி கடந்த 3-ம் தேதியன்று காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஆர்.முத்துக்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் அறுவைச்சிகிச்சை மூலம் இரும்பு நட்டை வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது நோயாளி ஜோஜப்பா நலமாக இருக்கிறார். 

சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர் குழுவினருக்கு மருத்துவமனை டீன் ஜெயந்தி பாராட்டு தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!