தமிழகப் பயணம் முடிந்து டெல்லி சென்றடைந்தார் அமித் ஷா!

அமித்ஷா

ருநாள் பயணமாக நேற்று காலை சென்னை வந்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, பயணம் முடிந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். அமித் ஷாவின் தமிழகப் பயணம் மாநில அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 'இங்கு எங்களைக் கிண்டல் செய்யும் எதிர்ப்பாளர்களுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது தெரியும்' என சவால் விட்டிருந்தார். பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது 'GO BACK MODI' என்ற ஹேஷ்டேக்கை சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆக்கியதுபோல, 'GO BACK AMITSHAH' என்ற ஹேஷ்டேக்கையும் நேற்று நெட்டிசன்கள் டிரெண்ட் ஆக்கினர். இதுமாதிரியான எதிர்ப்புகளுக்குப் பதில் தருவது போல அமித்ஷா பேசியது குறிப்பிடத்தக்கது. 

கிழக்குக் கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்குப் பிறகு, பா.ஜ.க நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், வி.ஜி.பி பகுதியிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு கார் மூலம் வந்தடைந்த அமித் ஷா, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். தமிழக பா.ஜ.க-வின் முன்னணித் தலைவர்கள் அவருடன் வந்து வழியனுப்பி வைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!