`சண்டக்கோழி 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

'இரும்புத்திரை' படத்துக்குப் பிறகு, விஷால் நடித்து வரும் 'சண்டக்கோழி 2' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான 'சண்டக்கோழி' படம் நல்ல ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து உருவாகி வரும் 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.

சண்டக்கோழி 2

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்து நடித்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. மேலும், படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் எனவும் இசை வெளியீடு தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!