வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (10/07/2018)

கடைசி தொடர்பு:07:20 (10/07/2018)

மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்..!

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு லண்டன் புறப்பட்டுச் சென்றார். 

மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மானியக்கோரிக்கை மீதான விவாதம் மே மாதம் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில், 8 வழிச்சாலை விவகாரம், சமூக ஆர்வலர்கள் தொடர் கைது உள்ளிட்ட விவகாரங்களில் தி.மு.க தொடர் கேள்வி எழுப்பிவந்தது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், நேற்று முடிவு பெற்ற நிலையில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவே லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவருடன், அவரின் மனைவி துர்கா ஸ்டாலினும் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமானநிலையத்திலிருந்து நேற்று விமானம் மூலம் புறப்பட்டார். லண்டனில் ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.