எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்!

அகில இந்திய எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

கலந்தாய்வு

அரசு மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டுக்கு 15 சதவிகித இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துப்படிப்புகளுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதார இயக்கம் நடத்துகிறது. இதற்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 12,683 இடங்கள் நிரம்பின. இந்நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள் மற்றும் கைவிடபட்ட இடங்களை நிரப்ப இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வின் முடிவுகள் ஜூலை12-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர ஜூலை 22-ம் தேதி கடைசி நாளாகும். இதைதொடர்ந்து மாநில ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 7-ம் தேதி நிறைவு பெற்றது.  இரண்டாம் கட்ட கலந்தாய்வு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!