வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (10/07/2018)

கடைசி தொடர்பு:11:20 (10/07/2018)

சட்டப்பேரவையில் அதிக கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் யார் தெரியுமா?

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிக கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் யார் என்பது உள்ளிட்ட தகவல்களை பேரவைத்தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை

சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மே மாதம் 29-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. ஆளுநர் உரையுடன் தொடங்கி இதுவரை தமிழக சட்டமன்றம் மொத்தம் 33 நாள்கள் நடைபெற்றது. அதில் மானியக்கோரிக்கை மீதான விவாதம், வாக்கெடுப்பு 23 நாள்கள் நடைபெற்றுள்ளன. இறுதிநாளான நேற்று லோக் ஆயுக்தா, உள்ளிட்ட மொத்தம் 19 மசோதாக்கள் ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

எஸ்.பி.வேலுமணி

இந்நிலையில், கடந்த 23 நாள்களாக நடந்த மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் ஆளுங்கட்சியினரைவிட எதிர்கட்சியினருக்கே பேசுவதற்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். அதில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் அதிக கேள்விகளைக் கேட்டுள்ளார் எனவும், அதிக கேள்விகளுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளதாகவும் தனபால் குறிப்பிட்டார். மேலும், 16 கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் 35 அறிக்கைகள் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.