வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (10/07/2018)

கடைசி தொடர்பு:12:20 (10/07/2018)

`உங்கள் மகன் 1,000 கோடி ரூபாய் எப்படி சம்பாதித்தார்'- அமித் ஷாவுக்கு ஈ.வி.கே.எஸ் கேள்வி

``ஊழல் பற்றி பேசும் அமித் ஷா, மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, அவரின் மகன் கடந்த 4 ஆண்டுகளில் எப்படி ரூ.1,000 கோடி சம்பாதித்தார் என்று விளக்கமளிக்க வேண்டும்'' ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இளங்கோவன்

தஞ்சாவூர் செல்வதற்காக சென்னை விமானநிலையம் வந்த  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  `தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாகக் கூறிய அமித் ஷா, ஏன் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்கவில்லை. ஊழல் பற்றி பேசும் அமித் ஷா, மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, அவரின் மகன் கடந்த 4 ஆண்டுகளில் எப்படி ரூ.1,000 கோடி சம்பாதித்தார் என்று விளக்கமளிக்க வேண்டும்' என்றார்.

தமிழகத்தில் காங்கிரஸ் இனி எழாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த அவர்,  `ஜெயலலிதா இல்லாத காரணத்தால் அமைச்சர் ஜெயக்குமார் இஷ்டம்போல் பேசி வருகிறார். தொடர்ந்து  அ.தி.மு.க-வினர் காங்கிரஸ் பற்றி விமர்சிப்பதை பார்க்கும்போது, அவர்களுக்கு கம்பி எண்ணும் நேரம் நெருங்கி வருவதை இது காட்டுகிறது' என்று தெரிவித்தார்.