டேங்கர் லாரி ஸ்டிரைக்குக்குத் தடை! - நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு, ஒப்பந்தத்தின் பேரில் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டுவருகின்றன. டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம், உதிரிப்பாகங்களின் விலை உயர்வால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதனால் வாடகையை உயர்த்தித் தரவேண்டும் எனவும் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கோரிக்கை வைத்தனர். இதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில்,   நேற்று காலை டேங்கர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, குறிப்பிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பெட்ரோல், டீசல் விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!