வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (10/07/2018)

கடைசி தொடர்பு:19:21 (10/07/2018)

ப.சிதம்பரம் வீட்டில் திருடிய பணிப்பெண்கள் கைது! 

சிதம்பரம்

 முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் தங்கம், வைர நகைகளைத் திருடிய பணிப்பெண்கள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

 காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இங்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை, பணம் கொள்ளைபோனதாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, புகார் வாபஸ் பெறப்பட்டதாகவும், புகாரே கொடுக்கவில்லை என்றும் தகவல் தெரிவித்தனர்

 இந்த நிலையில், ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில்  சிதம்பரம் தரப்பில் மீண்டும் கொள்ளைகுறித்து புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், அவருடைய வீட்டின் பணிப்பெண் வெண்ணிலா, அவரின் சகோதரி விஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் இருவரையும் போலீஸார் கைதுசெய்து, தங்கம், வைரம், 1,50,000 ரூபாய், பட்டுப் புடவைகள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்துள்ளனர்.