பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை! சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

17வயது மாற்றுத்திறனாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்த சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுமி

சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி அருகே உள்ளது, அச்சரம்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு பெண் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். ஒரு பெண்ணால் வாய் பேச முடியாது. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், வீட்டில் இருந்துவந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் பணிக்குச் சென்றுவிட்டனர். மாற்றுத்திறனாளி சிறுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.  இதை அறிந்துகொண்ட மர்ம நபர்கள், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி தங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவாள் என்ற அச்சத்தில் கொலை செய்துள்ளனர். உடலை வீட்டுக்கு அருகில் உள்ள கண்மாயில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள், பெண் கொலைசெய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

டி.ஐ.ஜி காமினி, எஸ்.பி ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்கள். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., ஜெயச்சந்திரன், ‘இச்சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்றும் கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!