மதுரை ஆதீனம் நியமன வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதிய உத்தரவு!

 

மதுரை ஆதீன நியமன விவகாரம் தொடர்பான வழக்கில் நித்தியானந்தாவை ஒரு தரப்பாகச் சேர்க்க அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆதீனமாக அருணகிரிநாதர் உள்ளார். இவருக்குப் பின் அடுத்த 293-வது ஆதீனமாக 2012-ல் நித்தியானந்தா அருணகிரிநாதரால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இதனிடையே நித்தியானந்தாவை அருணகிரிநாதர் நீக்கினார். இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்க்கக் கோரி நித்தியானந்தா தரப்பில் சப் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், நித்தியானந்தா மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து, நித்தியானந்தா தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்யப்பட்டது. அதில், தன்னை ஒரு தரப்பாகச் சேர்க்க மறுத்த சப்கோர்ட் உத்தரவை ரத்து செய்து, தன்னையும் வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்க்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் மதுரை முதன்மை சப் கோர்ட்டிலுள்ள வழக்கில் நித்தியானந்தாவையும் ஒரு தரப்பாகச் சேர்க்க அனுமதித்து உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!