கொல்கத்தாவில் ஸ்வாமி ஸ்மரநந்தா மஹாராஜை சந்தித்த ரஜினி! | Rajini in Ramakrishna mission

வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (11/07/2018)

கடைசி தொடர்பு:11:17 (11/07/2018)

கொல்கத்தாவில் ஸ்வாமி ஸ்மரநந்தா மஹாராஜை சந்தித்த ரஜினி!

கொல்கத்தாவில் ஸ்வாமி ஸ்மரநந்தா மஹாராஜை நடிகர் ரஜினிகாந்த சந்தித்து ஆசி பெற்றார்.

ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக டார்ஜிலிங் சென்ற நடிகர் ரஜினி, படப்பிடிப்பு முடிந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். ரஜினிகாந்த் சிறுவயதில் கர்நாடகாவில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் படிக்கும்போதே ஆன்மிகத்திலும், ராமகிருஷ்ணா மீதும் அதீத ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று அங்குள்ள சுவாமிகளிடம் ஆசி பெறுவது அவருடைய வழக்கம்.

ஆசீர்வாதம்

இந்நிலையில், டார்ஜிலிங் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்புவதற்கு முன் கொல்கத்தாவில் ஸ்வாமி ஸ்மரநந்தா மஹாராஜை சந்தித்து ஆசி பெற்றார்.இதைத்தொடர்ந்து ஆன்மிக ஆலோசனை பெற்றவர், ரஜினி மக்கள் மன்றத்தில் தான் எடுக்கவிருக்கும் அடுத்தகட்ட முடிவுகள் குறித்தும் கலந்தாலோசித்தார். இதனிடையே நேற்று 2.0 படம் ரீலிஸ் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க