மலேசியா சென்ற வைகோவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மலேசிய பினாங்கு மாகாணத்தின் துணை முதலமைச்சரான இராமசாமியின் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 

மலேசியா சென்ற வைகோ

பினாங்கு துணை முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் இராமசாமியும் வைகோவும் நீண்டகாலமாக நட்புடன் இருப்பவர்கள். ஈழத்தமிழர் பிரச்னைகளுக்காக மலேசியாவில் குரல் கொடுத்து வருபவர் இராமசாமி. அதற்காக பல பிரச்னைகளைச் சந்தித்தார். அவருடைய பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவருடைய மகன் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வைகோ தனது உதவியாளர்களுடன் நேற்று நள்ளிரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டார். கோலாலம்பூர் சென்றடைந்த வைகோவுக்கு இன்று காலை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலேசியாவைச் சேர்ந்த கழககுமார், டத்தோ.ராஜிவ், பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் சதீஷ்முனியான்டி, கே.எல்.டான், சையித், ஜகா, ராஜீவ்ராவ், ராஜேஷ்ராவ், கமான்டோ ஷான் ஆகியோர் வைகோவுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இன்று கோலாலம்பூரில் பல்வேறு தமிழ் பிரமுகர்களைச் சந்திக்கிறார் வைகோ. கடந்த முறை வைகோ ராமசாமியின் மகள் திருமணத்துக்காக மலேசியா சென்றபோது, விடுதலைப்புலி என்று மலேசிய அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!