வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (11/07/2018)

கடைசி தொடர்பு:12:26 (11/07/2018)

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மகன்- மாடல் அழகி ஊட்டியில் ரகசிய திருமணம்!

ஊட்டியில் கடந்த 7-ம் தேதி நடிகையுடன் நடக்கவிருந்த, இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மகன் மகாஷே சக்ரவர்த்தி திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, சினிமா துறை மட்டுமின்றி, நட்சத்திர ஓட்டல்களும் நடத்தி வருகிறார்.

மகாஷே சக்ரவர்த்தி- மடால்ஷா

ஊட்டியில் அவருக்கு மாெனார்க் நட்சத்திர ஓட்டலும், மசினகுடி அருகிலுள்ள பொக்காபுரம் பகுதியில் மாெனார்க் சபாரி என்ற பிரமாண்ட ரிசார்ட்டும் இருக்கிறது. மிதுன் சக்ரவர்த்தி, தன் மகன் மகாஷே சக்ரவர்த்தி திருமணத்தை ஊட்டியில் உள்ள தனது நட்சத்திர ஹோட்டலில் நடத்தத் திட்டமிட்டு, ஊட்டியில் அவருக்குச் சொந்தமான மாெனார்க் ஹோட்டலில் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், நடிகை ஒருவர், மகாஷே தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தான் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாகவும் ஏற்கெனவே, மும்பையிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் மகாஷே மீது புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் ஊட்டிக்கு விரைந்து, மிதுன் சக்ரவர்த்தி மற்றும் அவரின் மகனிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதனால், ஊட்டியில் மிதுன் சக்ரவர்த்திக்குச் சொந்தமான மொனார்க் நட்சத்திர ஹோட்டலில் மடால்ஷா என்பவருடன் கடந்த 7-ம் தேதி நடக்கவிருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது. போலீஸ் விசாரணை என்றதும் மடால்ஷாவின் குடும்பத்தினர் ஊட்டியிலிருந்து உடனடியாக கிளம்பிவிட்டனர். தமிழில் பரத் நடித்த `தம்பிக்கு எந்த ஊரு`, `பத்தாயிரம் கோடி' ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மடால்ஷா. இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி, ஜெர்மன் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். அவரும், மகாஷேவும் தீவிரமாக காதலித்து வந்தனர். ரகசிய திருமணம் குறித்து தகவல் அறிந்த அந்த நடிகை, டெல்லி  போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் மகாஷே சக்ரவர்த்தியின் திருமணம் ரத்து செய்யப்பட்டபோதும், டெல்லி நீதிமன்றம் மகாஷே சக்ரவர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் மசினகுடி அருகே உள்ள மிதுன் சக்ரவர்த்திக்குச் சொந்தமான மொனார்க் சபாரி ரிசார்ட்டில் மகாஷே சக்ரவர்த்திக்கும், மாடல் அழகி மடால்ஷாவுக்கும் ரகசிய திருமணம் நடந்தது. இதில் இருவீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர். இன்று புதன்கிழமை தம்பதிகள் மைசூரு செல்லவுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க