வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (11/07/2018)

கடைசி தொடர்பு:12:41 (11/07/2018)

`டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றமா?' - அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

``டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றுவது குறித்து நீதிமன்றம் அதன் கருத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து துறை சார்ந்தவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்" என்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

அழகு முத்துக்கோன்


சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 289-வது  பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், மாஃபா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்திய பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

ஜெயகுமார்


அப்போது பேசிய அவர், தீரன் அழகுமுத்துக் கோன் 17-ம் நூற்றாண்டில் வெள்ளையரை எதிர்த்துப் போராடியவர். அவரின் புகழைப் போற்றுகின்ற வகையில் அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. அகில இந்திய அளவில் மத்திய அரசால் அளிக்கப்படும் தகவல்தான் உண்மையானது. தமிழ்நாடு தொழில் தொடங்குவதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றுவது குறித்து நீதிமன்றம் அதன் கருத்தை தெரிவித்துள்ளது. ஒவ்வொருவரும் அவரின் கருத்தை தெரிவிக்கின்றனர். எனவே, இதுகுறித்து துறை சார்ந்தவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். வருகின்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிகமான தொழில் முனைவோர்கள் கலந்துகொள்வார்கள்' என்று  நம்பிக்கை தெரிவித்தார்.