வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:43 (12/07/2018)

`நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்' - சிலைக் கடத்தல் வழக்கில் நீதிபதி எச்சரிக்கை

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சிலை கடத்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் புதிதாக பல கோயில்களில் சிலைகள் திருட்டுப்போனதாகவும் புகார்கள் வருகின்றன. தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் சிலைக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீரங்கத்தில் 13 சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ``சிலைக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும்போதே சிலைக் கடத்தலும் நடைபெறுகிறது. சிலைத் திருட்டை தடுக்க முடியாத நிலையில், அரசின் நிர்வாகம் மோசமாக உள்ளது. தமிழக கோயில்களில் தொடர்ந்து சிலைகள் கடத்தப்படுவதை நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காது. இந்த நிலை நீடித்தால் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று எச்சரித்தார்.

சிலைக் கடத்தல் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, தமிழக அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.