ரூ.1,350 கோடி வரி ஏய்ப்புப் புகார்? நாமக்கல் ரெய்டின் அடுத்தகட்டம்!

கிறிஸ்டி ஃபிரைடு, அக்னி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.1,350 கோடி அளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்டி

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்குத் தேவையான சத்துமாவு, பருப்பு போன்றவற்றை விநியோகம் செய்யும் கிறிஸ்டி ஃபிரைடு கிராம்ஸ் நிறுவனம், அக்னி குழும நிறுவனங்கள் உட்பட, நான்கு  நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், கோவை, ஈரோடு, பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை உட்பட அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனை நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்னி

 

இதன் ஒருபகுதியாக, சென்னையிலுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சுதாதேவியின் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 5 நாள்கள் நடந்த சோதனையில், ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது. குறிப்பாக, நிறுவனத்தின் வரவு - செலவு ஆவணங்களும் இதர நிறுவனங்களின் தொழில்சார்ந்த விவர ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 100 பென்ட்ரைவ்கள், ஒரு லேப்-டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 5 நாள்களாக 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கிறிஸ்டி ஃபிரைடு, அக்னி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள், ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!