`வெற்றி பெற ஆண்டவன் அருள் வேண்டும்' - சென்னை விழாவில் ரஜினிகாந்த் பேச்சு!

சென்னையில் நடைப்பெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற  ரஜினிகாந்த் நல்ல எண்ணமும் ஆண்டவன் அருள் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பேசினார்.

ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்தப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொள்வதற்காக டார்ஜிலிங் சென்ற ரஜினி நேற்று (ஜூலை 10) இரவு சென்னை திரும்பினார்.இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைப்பெற்ற விழாவில் பங்கேற்றார். விழாவில் பேசியவர், ``எல்லோருடைய இதயத்தில் ஆண்டவன் இருக்கிறார். ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவியே முக்கியம். அதுவே ஆண்டவனுக்கு செய்யும் புண்ணியம்.  உழைப்பால், முயற்சியால் வெற்றி பெற முடியாது. நல்ல எண்ணமும் ஆண்டவன் அருள் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்" என்று பேசினார்.

முன்னதாக டார்ஜிலிங்கில் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்புவதற்கு முன் கொல்கத்தாவில் ஸ்வாமி ஸ்மரநந்தா மஹாராஜை சந்தித்து ஆசி பெற்றார். இதைத்தொடர்ந்து ஆன்மிக ஆலோசனை பெற்றவர், ரஜினி மக்கள் மன்றத்தில் தான் எடுக்கவிருக்கும் அடுத்தகட்ட முடிவுகள் குறித்தும் கலந்தாலோசித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!