காமராஜர் பிறந்த நாள் விழா..! கலந்துகொள்ள விருதுநகர் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

விருதுநகரில் வருகின்ற 15-ம் தேதி நடைபெறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழாவில்

விருதுநகரில் வருகிற 15-ம் தேதி நடைபெறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். 

காமராஜரின் 116-வது பிறந்த தினவிழா வருகின்ற 15-ம் தேதி நாடு முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த ஊரான விருதுநகரில் ஆண்டுதோறும் கல்வித் திருவிழாவாக நாடார் சங்கத்தினர் கொண்டாடுகிறார்கள். இதில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டாலும், ஆளும் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

காமராஜர் பிறந்த

இந்த நிலையில், இந்தாண்டு கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார் என்பதால் அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதலில் மதுரை வரும் அவர், பைபாஸ் சாலையில் உயர் மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் மதுரை மாநகர் கட்சி அலுவலக கட்டட பூமி பூஜையில் கலந்துகொள்கிறார். அதன் பின்பு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விருதுநகர் சென்று, காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதன் பின்பு நடைபெறும் சமூக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
விருதுநகரில் நடைபெறும்  விழாக்களில் கலந்துகொண்டு சென்ற அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இறங்குமுகம் ஏற்பட்டுள்ளது என்று சிலர் சொல்லி வரும் நிலையில் அந்த சென்டிமென்டை எடப்பாடி பழனிசாமி உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!