”இந்த அழுத்தத்துல இருந்து வெளியில வர முயற்சி செய்யணும்” மனைவியைப் பிரிந்த சாய்சக்தி பேட்டி

'ஜோடி', 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' உள்ளிட்ட ஷோக்களில் கலந்துகொண்டு டிவி ரசிகர்களைக் கலகலப்பூட்டியவர் நடிகர் சாய் சக்தி. தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு அனீஸ் ஃபாத்திமா என்பவருடன் திருமணம் நடந்தது. அனீஸ் ஃபாத்திமா சாய் சக்தியின் தந்தை வழி உறவுக்காரப் பெண். திருமணமான இரண்டே ஆண்டுகளில் கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றியதாகத் தெரிகிறது. ஆனாலும் சேர்ந்து வாழ்ந்து வந்த தம்பதிக்கு கடந்தாண்டு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில், தற்போது மனைவியைப் பிரிந்து விட்டதாகச் சொல்கிறார் சாய் சக்தி.

சாய்சக்தி

சாய் சக்தியிடம் பேசினோம். ``அறியாத வயசுல கல்யாணம் பண்ணக் கூடாதுங்கிறது எனக்குத்தான் பொருந்தும். பக்குவம் போதாத நிலையில கல்யாணம் பண்ணினது என் தப்புதான். சின்னச் சின்ன பிரச்னைகள். இடையில் தேவையில்லாமல் தலையிட்ட சில மூன்றாவது நபர்களால் பெரிசாயிடுச்சு. இனியும் சேர்ந்து வாழ முடியாதுங்கிறது ரெண்டு பேருக்குமே புரிஞ்சிடுச்சு. அப்பக்கூட நான் பொறுமையாகவே இருந்தேன். ஃபாத்திமா வீட்டுக்காரங்கதான் அவங்களைக் அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.தொடர்ந்து இஸ்லாமிய வழக்கப்படி பெரியவர்கள் முன்னிலையில பேசி, அவங்க போட்டு வந்த நகை உள்ளிட்ட பொருள்களை ஒப்படைச்சுட்டேன். இனி பேசறதுக்கு ஒண்ணுமில்லை. சீரியல், ஆங்கரிங்ல மனசைச் செலுத்தறது மூலம் இந்த அழுத்தத்துல இருந்து வெளியில வர முயற்சி செய்யணும்'' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!