மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைப்பு - கமல் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் பதிவு செய்துகொண்டது. இதையடுத்து, தனது கட்சியைப் பலப்படுத்துவதில் கமல் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை விளக்கப்பாடல் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சிக் கொடியை தலைவர் கமல்ஹாசன்  ஏற்றி வைத்து உரையாற்றினார்.

மக்கள் நீதி மய்யம்

அப்போது பேசுகையில், ‘மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த இயக்க வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றினார்கள். இனி அந்தக் குழுவில் இருந்த 11 பேரும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்து கட்சியை வழி நடத்துவார்கள்’ என அறிவித்தார். உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக இயங்கிய பாரதி கிருஷ்ணகுமார், கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட 11 பேரும் செயற்குழு உறுப்பினர்கள் ஆனார்கள். இதைத்தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவராக ஞானசம்பந்தம் செயல்படுவார் என அறிவித்தார். அதேபோல அருணாச்சலம் செயலாளராகவும், சுகா பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கமல் தெரிவித்தார். அதேபோல மண்டல நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டார். 
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!