`எய்ம்ஸ் வந்தது; 8 வழிச் சாலையும் வந்தது!' - பா.ஜ.க நட்பு குறித்து அமைச்சர் உதயகுமார்

அமைச்சர் உதயகுமார்

"மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதனால்தான் எய்ம்ஸூம் சேலம் 8 வழிச்சாலையும் வந்துள்ளன என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் கூறினார்.

மதுரை பாண்டிக்கோயில் பகுதியில் உள்ள அம்மா திடல் மைதானத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்  செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்கள் இருவரும் மதுரை வருகிறார்கள். இதில் தென்மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்கிறார்கள். அன்று மாலை பாண்டிகோவில் அம்மா திடலில் சைக்கிள் பேரணியைத் தொடங்கிவைக்கிறார்கள். இந்த சைக்கிள் பேரணி பாண்டிகோவில் பகுதியில் தொடங்கி 5 நாள் 10 தொகுதியைச் சுற்றி வந்து மீண்டும் பாண்டிகோவில் வந்தடைகிறது. இதில் 25,000 இளைஞர்கள் கலந்துகொள்கிறார்கள். போகும் வழியில் மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற இருக்கிறோம். ஓராண்டு சாதனை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சாதனை பேரணியில் நானும் சைக்கிள் மூலம் பேரணி செல்கிறேன். மதுரையை தொடர்ந்து அடுத்தபடியாக  32 மாவட்டங்களிலும்  நடைபெற இருக்கிறது. மத்திய அரசு இணக்கமாக இருப்பதனால்தான் எய்ம்ஸ் வந்துள்ளது. சேலம் 8 வழிச்சாலையும் வந்துள்ளது. அவர்களுடன் இணக்கமாக இருந்து மக்களுக்கு நல்லது செய்கிறோம்.

ஆர்.பி.உதயகுமார்

தமிழர்களை மத்திய அரசு நேசிப்பதால்தான் பல திட்டங்களை கொடுத்துள்ளனர். பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ள பற்றி பேசும் அளவுக்கு எனக்கு அதிகாரம் இல்லை. நான் சாதாரணமான ஒரு அமைச்சர். இது பற்றி கட்சி தலைமை முடிவு எடுக்கும்'' எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!