ஏரிகள் ஆக்கிரமிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அளவீடு செய்து எல்லைகளை வரையறை செய்ய கோரிய மனுவுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

உயர்நீதிமன்றம்

 

உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டம் 2007-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை அளவீடு செய்து அது சம்பந்தமான பதிவேடுகளைத் தயாரிக்க இந்தச் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாகியும் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை எனவும் ஏரிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரியும் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 2017- 2018-ம் ஆண்டு அரசு கொள்கை குறிப்பின்படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் 39,202 ஏரிகள் இருப்பதாகவும் இதில் பெரும்பாலான ஏரிகள் அளவீடு செய்யப்படாமலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் இளந்திரையன் அமர்வு, ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!