வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (12/07/2018)

கடைசி தொடர்பு:17:25 (12/07/2018)

தோட்டத்தில் சிறுமிக்கு நடந்தது என்ன? - அதிர்ச்சியைக் கிளப்பிய பிரேதப் பரிசோதனை அறிக்கை!

மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்பட்டுவந்த நிலையில், பாலியல்ரீதியான சீண்டலுக்கு சிறுமி உள்ளாகியிருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி ரம்யா படத்துடன் தாய் பொட்டியம்மாள்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை அடுத்துள்ள ஜெகதாப் கிராமத்தை வல்லரசு, பொட்டியம்மாள் தம்பதிகளின் மகள், சந்தியா என்கிற ரம்யா. ஜெகதாப் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறார். வல்லரசு, பொட்டியம்மாளை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்துவருகிறார். தாய் பொட்டியம்மாள்தான் கூலி வேலை செய்தும், சொந்தமாக இருக்கும் 30சென்ட் கூட்டு நிலத்தில் கீரைகளைப் பயிர்செய்து விற்பனைசெய்தும் ரம்யாவை படிக்கவைக்கிறார். 

இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தோட்டத்தில் உள்ள கீரைக்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டாரை இயக்கியபோது, மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார் என்று தாய் பொட்டியம்மாள் உள்ளிட்ட கிராமமே நம்பிக்கொண்டுள்ளது. ஆனால் பிரேதப் பரிசோதனை செய்த காவேரிப்பட்டினம் அரசு மருத்துவர்கள் குழு, சிமிறு ரம்யா மின்சாரம் தாக்கி இறக்கவில்லை; மூச்சுத் திணறி இறந்துள்ளார். மேலும், பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு காணப்படுகிறது. பாலியல் வன்கொடுமையால் இறந்திருக்கக் கூடும் என்ற மருத்துவர்களின் அறிக்கை, சிறுமியின் மரணத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

பிரேத பரிசோதனை அறிக்கை

இதுகுறித்து காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியத்திடம் பேசினோம்., சிறுமி ரம்யா மின்சாரம் தாக்கிதான் இறந்துள்ளார். மின்சாரம் என்றால் மெயின் இல்லை, எர்த் மட்டும் தாக்கி இறந்துள்ளார் என்றார். ஆனால், சிறுமி ரம்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகுறித்து கேட்டதற்கு., இன்ஸ்பெக்டர் சுப்ரமணியத்திடம் பதில் இல்லை. 

சிறுமி ரம்யாவின் இறப்பு, விபத்து கிடையாது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. ஆனால், போலீஸ் தரப்பில் ஏனோ..? சந்தேக மரணம் என்று 174-பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடக்கி வைத்துள்ளனர்.