வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (12/07/2018)

கடைசி தொடர்பு:17:55 (12/07/2018)

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தீவிரமடைகிறது பருவமழை!

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை

இது தொடர்பாகத் தகவல் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், `அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் நீலகிரி கோவை, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போல மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 9 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் பதிவாகும்' எனக் குறிப்பிட்டுள்ளது.