வயலில் இறங்கி நாற்று நட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சிலம்பிமங்கலத்தில் அண்ணாமலைp பல்கலைக்கழக வேளாண்மை இறுதி ஆண்டு படிக்கும் 20 மாணவிகள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாயம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

மாணவிகள்

சிலம்பிமங்கலத்தில் தங்கியுள்ள வேளாண் கல்லூரி மாணவிகள் அப்பகுதி விவசாயிகளுக்கு உயிர் பூஞ்சன கொல்லியைப் பயன்படுத்தி நெல் நடவு குறித்த செயல் விளக்கம் அளித்தனர். ரசாயன பூச்சிக்கொல்லியைத் தவிர்த்து உயிர் பூஞ்சான கொல்லியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும், இயற்கை விவசாயத்தின் இன்றியமையாமை பற்றியும் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு என்ன நெல் ரகத்தைப் பயன்படுத்துவது, எவ்வளவு இடைவெளியில் நடவு செய்வது, உரம் இடுவது பற்றியும், பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் ஜெயசீலன், மீனாம்பிகை, ஓய்வு பெற்ற மாவட்ட வேளாண்மை அதிகாரி சந்திரமோகன், விவசாயிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் 45 நாள் இக்கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும் செயல் விளக்கங்களையும் செய்து காண்பிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!