போலி வாக்காளர் அடையாள அட்டை... தேர்தல் ஆணையத்தின் யூசர்நேம் பாஸ்வேர்டு கிடைத்தது எப்படி?

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பிரின்ட் எடுக்க வேண்டுமானால், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் லாகின் செய்து உள்ளே செல்ல வேண்டும். அதற்கெனத் தனியான யூசர்நேம், பாஸ்வேர்டு வேண்டும். அவை குறிப்பிட்ட தனியார் கம்ப்யூட்டர் சென்டருக்கு எப்படிக் கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலி வாக்காளர் அடையாள அட்டை... தேர்தல் ஆணையத்தின் யூசர்நேம் பாஸ்வேர்டு கிடைத்தது எப்படி?

நாகர்கோவிலில் போலி வாக்காளர் அடையாள அட்டைகளைத் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில், தேர்தல் ஆணைய இணைய தளத்துக்குள் நுழைவதற்கு யூசர்நேம்,பாஸ்வேர்டு கொடுத்ததற்காக அரசு கேபிள் டி.வி. நிறுவன ஊழியர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் போலியாக வாக்காளர் அடையாள அட்டை பிரின்ட் எடுத்து சிலர் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே-வுக்குப் புகார் சென்றது. அரசு ஊழியர் ஒருவரை அந்த கம்ப்யூட்டர் சென்டருக்கு அனுப்பி போலி வாக்காளர் அட்டை விற்பனை நடக்கிறதா என விசாரித்து வரும்படி, கலெக்டர் கூறியுள்ளார். அந்த ஊழியரும் சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் சென்டருக்குச் சென்று, `வாக்காளர் அடையாள அட்டை வேண்டும்' என்று கேட்டிருக்கிறார். அந்த கம்ப்யூட்டர் சென்டரில் ரூ.150 வாங்கிக்கொண்டு வண்ண வாக்காளர் அடையாள அட்டை பிரின்ட் எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். உடனடியாக மாவட்ட காவல்துறை நடவடிக்கையைத் தொடங்கியது.

போலி வாக்காளர் அட்டை தயாரித்த செந்தில்குமார்

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் அறிவுறுத்தலின் பேரில், கோட்டாறு காவல் நிலைய அதிகாரிகள், அந்த கம்ப்யூட்டர் சென்டரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அந்த சென்டரில் வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து வழங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு சில வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த கம்ப்யூட்டர் சென்டரைச் சேர்ந்த செந்தில்குமார், சுபாஷ் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பிரின்ட் எடுக்க வேண்டுமானால், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் லாகின்சதீஷ் செய்து உள்ளே செல்ல வேண்டும். அதற்கெனத் தனியான யூசர்நேம், பாஸ்வேர்டு வேண்டும். அவை குறிப்பிட்ட தனியார் கம்ப்யூட்டர் சென்டருக்கு எப்படிக் கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கோவையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் சதீஷ், தேர்தல் ஆணையத்துக்குள் செல்வதற்கான யூசர்நேம், பாஸ்வேர்டு-ஐக் கொடுத்ததாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கோவை சென்ற குமரி மாவட்ட போலீஸார் சதீஷ்குமாரை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், சதீஷூக்கு யூசர்நேம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால், இப்போது ராமநாதபுரத்தில் முகாமிட்டிருக்கிறது குமரி போலீஸ்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ``வாக்காளர் அடையாள அட்டையை பிரின்ட் எடுப்பதற்கு தங்களைத் தொடர்புகொள்ளலாம் என்று தொடர்பு எண் ஆகியவற்றுடன் வாட்ஸ்அப்பில் முதலில் தகவல் பரப்பியிருக்கிறார்கள். இந்த வாட்ஸ்அப் தகவலின் அடிப்படையிலேயே கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. வாக்காளர் அடையாள அட்டை எடுப்பதற்கு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இ-சேவை மையங்களில் மட்டும்தான் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் பிரின்ட் எடுக்க முடியும். இதுகுறித்த சரியான விளக்கத்தை நாங்கள் உயர் அதிகாரிகளுக்கு அளித்திருக்கிறோம். எனவே, அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்குத் தெரியாமல் வாக்காளர் அடையாள அட்டைகளை பிரின்ட் எடுக்க முடியாது. அதன்படி சென்னையில் உள்ள கேபிள் டி.வி. நிறுவனத்தில் பணிபுரியும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. விரைவில் கைது நடவடிக்கை இருக்கும்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!