`என்னை முற்றிலும் முடக்கிப்போட அரசு நினைக்கிறது' - நீதிபதியிடம் முறையிட்ட முகிலன்!

``சிறை கொசுக்கடியால் என் உடம்பில் எவ்வளவு கொப்புளங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று நீங்களே பாருங்கள். என்னை வேண்டுமென்றே அரசு சுகாதாரமற்ற அறையில் அடைத்து சித்ரவதை செய்கிறது" என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் நீதிபதியிடம் உருக்கமாகக் கூறினார்.

முகிலன்


 
இயற்கைக்காகத் தொடர்ந்து போராடிவரும் முகிலன்மீது, கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காகக் காவல்துறை வழக்கு பதிந்திருக்கிறது. அதற்காகத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவர், மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதோடு, கடந்த 2017-ம் ஆண்டு கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சீத்தப்பட்டியில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்ற குற்றம்சாட்டப்பட்டு, அவர்மீது சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்குக்காக முகிலனை இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த கருர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா 26-ம் தேதி முகிலனை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். அப்போது நீதிபதியிடம் முறையிட்ட முகிலன், "மதுரை சிறையில் சுகாதாரமற்ற தனி அறையில் போட்டு என்னை சித்ரவதை செய்து வருகிறார்கள். என்னை முற்றிலும் முடக்கிப்போட மாநில அரசு இப்படி செய்கிறது. இந்தக் கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. அந்த அறையில் கொசுக்கடி தொல்லையால் என் உடம்பில் எவ்வளவு கொப்புளங்கள் ஏற்பட்டிருக்குன்னு நீங்களே பாருங்க" என்றதோடு, நீதிமன்றத்திலேயே தனது சட்டையைக் கழட்டி நீதிபதியிடம் முறையிட்டார் முகிலன். ஏற்கெனவே, நெல்லை வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதே கோரிக்கையை முகிலன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!