மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடைகளைத் திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

மீனாட்சி அம்மன் கோவில் 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளை டிசம்பர் 31 வரை திறக்க அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடைக்காரர்கள் சங்கத்தின் தலைவர் ராஜூநாகுலு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த மனுவில், ``எங்கள் சங்கத்தில் 115 உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் மீனாட்சியம்மன் கோயிலில் 100 சதுரடி மற்றும் 120 சதுரடி அடங்கிய கடைகளில் மஞ்சள், குங்குமம், பூஜை பொருள்கள், செயற்கை நகைகள், இந்து மத புத்தகங்கள், பூ விற்பனை செய்கிறோம். பிப். 2-ம் தேதி இரவு 72 வது கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதைச் சமாளிப்பதற்காகக் கோயிலிலுள்ள கடைகளைக் காலி செய்யும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் இறங்கியுள்ளது. தற்போது எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை. 

இந்தநிலையில், கடைகளைக் காலி செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. எனவே, கடைகளைத் திறக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த  மனு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரனைக்கு வந்தபோது டிசம்பர் 31 வரை கோயில் அம்மன் சந்நிதியில் உள்ள 51 கடைகளை திறக்க அனுமதியளித்தார். அதே நேரத்தில் கடை உரிமையாளர்கள் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கடைக்கு எந்த வாடகை பாக்கியும் இல்லாமல் வாடகை செலுத்தியிருக்க வேண்டும், முக்கியமாக டிசம்பர் 31 வரை மட்டுமே கடை நடத்துவோம் என உறுதிமொழியிட்ட பத்திரத்தைக் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்து கடைகளைத் திறந்து கொள்ளலாம் என உத்தரவுப் பிறப்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!