சமயபுரம் யானை மசினிக்கு திடீர் உடல்நலக்குறைவு!

பாகன் கஜேந்திரனைக் கொன்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மசினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சமயபுரம் கோயிலுக்கு வழங்கப்பட்ட யானை, மசினி. இந்த யானையை ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தைச் சேர்ந்த கஜேந்திரனும், அவரின் மகன் அச்சுதனும் பராமரித்து வந்தனர். வழக்கம்போல, கடந்த மே 25-ம் தேதி காலையில் யானைக்கு அலங்காரம்செய்து, கோயில் கொடிமரம் அருகே அதை நிறுத்தியிருந்த நிலையில், திடீரென ஆக்ரோசமாகிப் பாகன் கஜேந்திரனை காலால் மிதித்துக் கொன்றது. இதையடுத்து, யானையை கொட்டகைக்குக் கொண்டுசென்று பராமரித்துவந்தனர்.

சமயபுரம் யானை மசினிஇந்நிலையில், தற்போது யானை மசினியின் இடது காலில் ஏற்பட்டுள்ள நீர்க்கட்டியால் அவதிப்பட்டுவருகிறது. அதையடுத்து, கால்நடை மருத்துவர் மனோகரன்,  மசினிக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை. இதனால், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை சிறப்பு மருத்துவர் கலைவாணன், யானை மசினியை பரிசோதனைசெய்ய வரவழைக்கப் பட்டுள்ளார்.

அதன்பிறகு அவரது அறிவுறுத்தலின்படி, ஒரத்தநாடு பகுதியிலுள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு மசினியைக் கொண்டுசென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!