உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறையில் தலையிட முடியாது - நீதிமன்றம் மறுப்பு!

வார்டு மறுவரையறைப் பணிகள் என்பது அதிகாரிகள் பணி எனவும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

உயர் நீதிமன்ற மதுரை கிளை

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலகுரு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த பொதுநல மனுவில், ``திண்டுக்கல் மாவட்டம் நாராயண நகர் 1-வது மற்றும் 2-வது தெரு பகுதி, திண்டுக்கல் மாநகராட்சி எல்கைக்கு உட்பட்டது. நாராயண நகர் என்பது திண்டுக்கல் மாநகராட்சியின் 6-வது வார்டில் இருந்த நிலையில், அப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்தது. ஆனால், தற்போது உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ள வார்டு மறுவரையறைப் பட்டியலில், நாராயண நகர் 1-வது மற்றும் 2-வது தெரு பகுதிகள், 12-வது வார்டுக்கு மாற்றப்பட்டது. 

இதனால், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், இந்த வார்டு மறுவரையறைப் பட்டியலைத் திருத்தம்செய்ய, திண்டுக்கல் மாநகாரட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி திட்ட அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனு, இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அஹமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வார்டு மறுவரையறைப் பணிகள் என்பது அதிகாரிகள் பணி எனவும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறி மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!