முகிலனுக்கு சிறையில் நடந்த கொடுமைகள் தொடர்பாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் முகிலனை மதுரை மத்திய சிறையில் கழிப்பறை அருகே பயன்பாடற்ற தனிமை சிறையில் அடைத்தது தொடர்பாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதிபதி மதுரை மத்திய சிறையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யகோரிய வழக்கில் தமிழக சிறைதுறை ஏடிஜிபி க்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு .

முகிலன்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் முகிலனை மதுரை மத்திய சிறையில் கழிப்பறை அருகே பயன்பாடற்ற தனிமைச் சிறையில் அடைத்தது தொடர்பாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதிபதி மதுரை மத்திய சிறையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யகோரிய வழக்கில் தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

திருச்சியைச் சேர்ந்த ஸ்டீபன் செல்வராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் "முகிலன் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்த வழக்கில் கடந்த 300 நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை நானும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் கடந்த 6-ம் தேதி மதுரை மத்திய சிறையில் சந்தித்தோம். அப்போது மதுரை மத்திய சிறையில் என்னை பல ஆண்டுகளாக பயன்பாடற்ற தனிமைச் சிறையில்  அடைத்துள்ளனர். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே, முகிலனை மற்ற கைதிகளைப் போல் நடத்த வேண்டும். மேலும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் முகிலனை மதுரை மத்திய சிறையில் கழிப்பறை மற்றும் கழிப்பறை குழி அருகேயுள்ள பயன்பாடற்ற தனிமை சிறையில் பல ஆண்டுகளாக அடைத்தது மற்றும் முகிலனுக்கு சிறை சலுகைகளை மறுத்தது குறித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிபதி மதுரை மத்திய சிறையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இதுகுறித்து தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூலை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!