வரும் 16-ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

கூட்டம், அ.தி.மு.க

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாகத் தலைமை ஏற்க உள்ளனர். அ.தி.மு.க எம்.பி-க்களுக்கான கூட்டமும் அன்றே நடைபெறுகிறது. 

அ.தி.மு.க உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் விவகாரத்தைச் சுற்றி ஏற்கெனவே பல சர்ச்சைகள் உலா வந்துகொண்டிருக்கின்றன. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் இப்பணிகளையே செய்வதில்லை, உறுப்பினர்களை அழைத்துப் பேசுவதில்லை, வெறும் பணத்தை மட்டும் தலைமை அலுவலகத்தில் கட்டிவிடுகிறார்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நடைபெற உள்ள கூட்டத்தில் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட இருக்கிறதாம். மேலும், நாடாளுமன்றத் தேர்தல், கட்சியின் கட்டமைப்பு குறித்து விரிவாகப் பேசப்படும் என அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!