கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்.. பயிற்சியாளர் கைது!

கோவையில், தனியார் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சியாளர் ஆறுமுகம்

கோவை நரசீபுரம் பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று அந்த கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாவது மாடியிலிருந்து, கீழே வலைகட்டி குதிக்கும் பயிற்சியின்போது, பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துவந்த, லோகேஷ்வரி என்ற மாணவி எதிர்பாராத விதமாக, உயிரிழந்தார். அந்த மாணவி குதிக்க மறுத்தும், பயிற்சியாளர் ஆறுமுகம் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டதால்தான் மாணவி உயிர் பறிபோனது என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த வீடியோ பரவி வைரலானது. இதையடுத்து, ஆறுமுகம் மீது, 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், கல்லூரிக்கு அழைத்துச் சென்றும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மீதும்,  பயிற்சியாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!