`குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை; செப்டம்பருக்குள் சென்னை முழுவதும் சிசிடிவி கேமரா!

செப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கண்கானிப்பு கேமிரா

சென்னை மயிலாப்பூர் காவல்நிலைய வளாகத்தில் காவலர்களுக்காகப் புதிதாக கட்டப்பட்ட நூலகம்,  நடைபாதை, உடற்பயிற்சிக் கூடத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் குற்றங்களைத் தடுக்கவோ, குறைக்கவோ முடியும். அதேபோல குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்ய முடியும். கண்காணிப்புக் கேமராக்களின் முக்கியத்துவத்தை அறிந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அதைப் பொருத்தி வருகின்றனர். வருகின்ற செப்டம்பர் மாதம் இறுதிக்குள் சென்னை முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவல்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பழைய வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அனைத்துக் காவல் நிலையங்களிலும் உடற்பயிற்சிக்கூடம், நூலக வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. சுத்தமான காவல்நிலையங்கள் மட்டுமே இருக்கும் பெருநகரமாக சென்னை உருவெடுக்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!