`பணம் பெற்றுக்கொண்டு செயல்படுகிறீர்களா? - சி.எம்.டி.ஏ. மீது உயர்நீதிமன்றம் தாக்கு!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆக்கிரமிப்பாளர்களிடம் பணம்பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயர்நீதிமன்றம்


நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயம் மாநகராட்சி கட்டடத்தை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது `சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளதா? ஆக்கிரமிப்புகளைத் தடுக்காத சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை ஏன் கலைக்க கூடாது? சி.எம்.டி.ஏ அதன் வேலையை சரியாகச் செய்யவில்லை. சென்னையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. சி.எம்.டி.ஏ அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவில்லை. மேலும், 2015 வெள்ளத்துக்குப் பிறகும் மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ பாடம் கற்கவில்லையா. நேற்று சென்னையில் பெய்த மழையால் சாலையில் தேங்கிய நீரைக்கூட மாநகராட்சியால்  அகற்றமுடியவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றச் செல்லும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியை பெருநகர மாநகராட்சி மாற்றியுள்ள நிலையில் கூடுதல் பரப்புகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போதுமான பணியாளர்கள் உள்ளனரா;  சி.எம்.டி.ஏ-வில் போதுமான பணியாளர்கள் உள்ளனரா?  சி.எம்.டி.ஏ மற்றும் மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜூலை 16-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!