தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட் பராமரிப்புப் பணிக்காக மின் உற்பத்தி வைக்கப்பட்டுள்ளது. காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைப்பதால் 3-வது யூனிட்டில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 420 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையம்
 

இந்தியாவின் பழைமையான அனல் மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல் மின் நிலையமும் ஒன்றாகும். நிலக்கரி அடிப்படையிலான இத்துறைமுகம், கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் 210 மெகாவாட் வீதம் நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதில் உள்ள முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் இயங்கி வருகிறது. இதனால், இவற்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபட்டு வருகிறது. சில சமயம், தண்ணீர் பற்றாக்குறையாலும் மின் உற்பத்தி தடைபட்டு வந்தது. இந்நிலையில் 1-வது யூனிட்டில்,  பராமரிப்புப் பணிக் காரணங்களுக்காக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது காற்று அதிகமாக வீசிவருவதால் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி போதிய அளவில் கிடைத்து வருகிறது.

காற்றாலை மூலம் மின்சாரம் கிடைத்து வருவதால் 3-வது யூனிட்டிலும் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி குறைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!