வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (13/07/2018)

கடைசி தொடர்பு:12:50 (13/07/2018)

ஆபாச வீடியோவுக்காக கொதிக்கும் இன்ஸ்பெக்டர்!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவரின் ஆபாச வீடியோ வாட்ஸ்அப்களில் வைரலாகி வருகிறது

ன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவரின் ஆபாச வீடியோ வாட்ஸ்அப்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்பெக்டர் பென்சாம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருபவர் பென்சாம். இவரின் இரண்டு ஆபாச வீடியோக்கள் வாட்ஸ்அப்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் இரு வீடியோவில் அவர் வாட்ஸ்அப் வீடியோவில் பேசுகிறார். அதில் இன்ஸ்பெக்டர் பென்சாம் யூனிபாமில் நிற்கிறார். எதிர்புறத்தில் பேசுபவர் அதை ரெக்கார்ட் செய்திருக்கிறார். எதிர்பக்கம் பேசுவது யார் என தெரியாதவாறு கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் என்ன பேசுகிறார்கள்  என்பதும் மறைக்கப்பட்டுள்ளது. எதிர்தரப்பில் பெண் ஒருவர் பேசுவதால் இவர் யூனிபாமில் இருக்கும்போதே ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதுபோன்று வீடியோ பதிவாகியுள்ளது.

பென்சாம் இன்ஸ்பெக்டர்

மற்றொரு வீடியோ அழைப்பில் சாதாரண உடையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் பென்சாமின் ஆபாச செய்கைகள் பதிவாகியுள்ளன. பெண்களை வளைத்துப்போடும் நோக்கில் இன்ஸ்பெக்டர் வீடியோ அழைப்பில் பேசியிருக்கலாம் எனவும். இது பிடிக்காத ஒரு பெண் அதை பதிவுசெய்து கசியவிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுபற்றி இன்ஸ்பெக்டர் பென்சாமிடம் கேட்டதற்கு, ``யாரோ சட்டவிரோதமாக இதைச் செய்திருக்கிறார்கள்.  அதுபற்றி நான் விசாரிக்கிறேன்" என்று மட்டும் சொன்னார்.