சினிமா பாணியில் கொல்லப்பட்ட குழந்தைகள்... தூக்கில் தொங்கியபடி கிடந்த தாய்!

இரண்டு குழந்தைகளைப் பாலித்தீன் பையால் முகத்தை மூடி கொலை செய்து தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை டி.வி.எஸ்.நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த குழந்தைகள், தாய்

மதுரை டி.வி.எஸ் நகர் அருகிலுள்ள சத்யசாய் நகரில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இன்று காலை ராஜா வேலைக்குச் சென்றுவிட வீட்டில் அவரின் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட நிலையில், மனைவி மைக்கல் ஜுவா தூக்கில் தொங்கியுள்ளார். தகவல் தெரிந்து கணவர் ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணியபுரம் காவல்துறையினர்  உடல்களைக் கைப்பற்றி விசாரணை செய்தனர்.

அதில், குழந்தைகளைப் பாலித்தின் பையால் தலை நுழைத்து முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு  தாய்  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரும் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாயும் இரண்டு குழந்தைகளும் மோசமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!