வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (13/07/2018)

கடைசி தொடர்பு:16:50 (13/07/2018)

`நம்பிக்கை இல்லையென்றால் மீன்களை ஆய்வுசெய்துபாருங்கள்' - சவால்விடும் ஜெயக்குமார்!

மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மார்க்கெட்டில் மீன்களை எடுத்து மீனவ பல்கலைக்கழகம் மூலம் பரிசோதனை செய்து பார்க்கட்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், `பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக, தவறான கருத்து பரப்படுகிறது. இதனால்  மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பல இடங்களிலிருக்கும் மீன்கள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதில் எந்த  பாதிப்பும் இல்லை என்கிற அறிக்கை  வந்துள்ளது. ஆகவே மக்கள் பயப்படதேவையில்லை. மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் இன்று மீனவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 70 சதவிகிதம் மீன்கள் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. இன்னும் 30 சதவிகிதம் மீன்கள்  தேவை உள்ளது. அப்படி இருக்க கெமிக்கல் போட்டு பதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாகவே மீன்கள் பாதுகாக்கபடுகிறது. பொது மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மீன்களில் பல நன்மைகள் உள்ளது.வீணான வதந்திகளை பரப்பி மீனவர்கள் நலனில் விளையாட வேண்டாம். மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மார்க்கெட்டில் மீன்கள் எடுத்து மீனவ பல்கலைக்கழகம் மூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம். மீன் மார்க்கெட்டில் மக்கள் முன்னிலையில்  மீன்வளத்துறை, உணவு பாதுகாப்பு துறை,  உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து மீன்கள் சோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' இவ்வாறு அவர் கூறினார்.