கூடுவாஞ்சேரியில் 30 ஆண்டுகால ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு! - இந்து அறநிலையத் துறை நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கூடுவாஞ்சேரி பேரூராட்சி. இப்பகுதியில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

கூடுவாஞ்சேரி ஆக்கிரமிப்பு அகற்றம்

கோவிலுக்கு எதிரே 5.83 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்தக் குளத்தை சரியாகப் பராமரிக்காத காரணத்தால், இப்பகுதியில் வசிக்கும் அரசியல் பிரமுகர்கள் கோயில் நிலங்களை விற்கத் தொடங்கினர். எவ்வித ஆவணமும் இல்லாமல் சிலர் நிலத்தை வாங்கி வீடு கட்டத் தொடங்கினர். கடந்த 30 வருடங்களாக இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் புகார் அனுப்பி வந்தனர். இந்தப் புகாரை அடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் அசோக்குமார் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் அந்த இடத்தில் இருந்து வெளியேறுவதாக இல்லை. இதனால், இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் வருவாய் துறையினர் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். வீடுகளை இடிக்கக் கூடாது என சில அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த 21 வீடுகளையும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளினார்கள். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் 25 கோடி இருக்கும் என்கிறார்கள் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!