விஜயகாந்த்துக்காக மண்சோறு சாப்பிட்ட தே.மு.தி.க தொண்டர்கள்!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று வர வேண்டும் என்று தே.மு.தி.க-வினர் இன்று மதுரை மாரியம்மன் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கினர். 

மண்சோறு சாப்பிட்ட

சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளார் விஜயகாந்த். அவர் உடல்நலம் தேறி, ஆரோக்கியமாக நாடு திரும்ப வேண்டும் என்று மதுரை மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகளும் தொண்டர்களும் தினமும் கோயில்களில் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் அலங்காநல்லூர் முனியாண்டி கோயிலில் கிடா வெட்டி, சிறப்புப் பூஜைகள் செய்தனர். அதன்பிறகு, அவனியாபுரம் மந்தையம்மன் கோயிலில் 1,001 தேங்காய் உடைத்து சிறப்புப் பூஜைகள் செய்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று, மாநகர் வடக்கு மாவட்டத்தினர் மதுரை தெப்பகுளம் மாரியம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை செய்து, மண் சோறு சாப்பிட்டு, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். பிறகு,கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில், தே.மு.தி.க மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் கவியரசு, பொருளாளர் செல்வகுமார் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!