வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் தளர்வு! - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | madras hc relaxed bail conditions for TVK leader Velmurugan

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (13/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (13/07/2018)

வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் தளர்வு! - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கோட்டாறு காவல் நிலையத்தில் கையெழுத்திடும் நிபந்தனை தளர்த்தப்பட்டதை அடுத்து நாகர்கோவிலிலிருந்து வேல்முருகன் புறப்பட்டுச் சென்றார்.

வேல்முருகன்

சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்தியது மற்றும் தேசத்துரோக வழக்குகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த மே மாதம் 26-ம் தேதி தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, 25 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின் நாகர்கோவிலில் தங்கி கோட்டாறு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.  அதன் அடிப்படையில் கடந்த 19 நாள்களாக நாகர்கோயிலில் தங்கி, கோட்டாறு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில், கோட்டாறு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையைச் சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியது. இதையடுத்து, நாகர்கோவிலிலிருந்து இன்று மாலை வேல்முருகன் புறப்பட்டு சென்றுவிட்டார். வரும் திங்கள்கிழமை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நீதிமன்றத்தில் வேல்முருகன் ஆஜராகிறார். பின்னர், நெய்வேலியில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அவர் சந்திக்க இருக்கிறார். எனவே, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் நாகர்கோவில் செல்ல வேண்டாம் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது


[X] Close

[X] Close