ஓ.என்.ஜி.சி நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அனுப்பாதீர்கள்! கல்லூரிகளுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை

விடுக்கும் போராட்டக்காரர்கள்... தஞ்சாவூர் பெரியகோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற சதய விழாவிற்கு பெரும் தொகையை நன்கொடையாக கொடுத்து ஓஎன்ஜிசி.மேலும் திரும்பிய பக்கமெல்லாம் அந்த நிறுவனத்தின் போர்டுகளை வைத்தது இதற்கு அந்த சமயத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.இப்போது ஓஎன்ஜிசி நிறுவனமும் இந்திய தொல்லியல் துறையும் இணைந்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் துாய்மை பாரத இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது போரட்டகாரர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது

தஞ்சாவூர் பெரியகோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற சதய விழாவுக்குப் பெரும் தொகையை நன்கொடையாக கொடுத்தது ஓ.என்.ஜி.சி. மேலும், திரும்பிய பக்கமெல்லாம் அந்த நிறுவனத்தின் போர்டுகளை வைத்தது. இதற்கு அந்த சமயத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இப்போது ஓ.என்.ஜி.சி  நிறுவனமும் இந்திய தொல்லியல் துறையும் இணைந்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது போராட்டக்காரர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஓ.என்.ஜி.சி தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும் என டெல்டா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  கதிராமங்கலம் மக்கள் ஓ.என்.ஜி.சி வெளியேற வேண்டும் என கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் சில மாதங்களாக கோயில் விழாக்களுக்கு நிதி கொடுப்பது, மக்களின் சக்தி என்ற வாசகம் அச்சடிக்கபட்டு பல இடங்களில் விளம்பரப் பலகை வைப்பது போன்ற செயல்களைச் செய்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பதோடு குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் செய்து வருகிறது. மேலும், இப்போது கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் பேச ஆரம்பித்துள்ளனர். இதற்கு அரசும் தனியார் கல்லூரிகளும் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என கூறி வருகிறார்கள் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடி வருபவர்கள்.

அவர்களிடம் பேசினோம். 'அறநிலையத்துறை மற்றும் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வரும் தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்ன ராஜராஜ சோழன் பிறந்த நாள் சதயவிழாவாகா கொண்டாடப்பட்டு வருகிறது. ஓ.என்.ஜி.சிக்கு எதிராக  கடுமையான போராட்டங்கள் நடந்து வந்த அந்த சமயத்தில்  நடைபெற்ற சதயவிழாவைக் கொண்டாடுவதற்கு பெரும் தொகையை ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் கொடுத்தனர். இதற்கு, அந்த நேரத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது அதே தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வரும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் தொல்லியல் துறையும் ஓ.என்.ஜி.சியும் இணைந்து தூய்மை இந்தியா இயக்கத்தின் விழிப்பு உணர்ச்சி நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றனர். இதற்கு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அழைத்து வரப்பட்டனர். இதில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் காவிரிப் படுகை முதன்மைச் மேலாளர் உஷாபிரபாகர் கலந்துகொண்டு துாய்மை இந்தியா இயக்கத்தின் செயல்பாடுகள், பிளாஸ்டிக் ஒழிப்பு அவை மண்ணை எப்படி  நாசாமாக்குகிறது என்பது குறித்து பேசியிருக்கிறார்.

ஓ.என்.ஜி.சியால் நம் விவசாய நிலங்கள் பாழ்படுவதோடு தன் வளத்தை இழந்து வருகிறது. அவற்றுக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரி மாணவர்களை அழைத்து தூய்மை என்கிற பெயரில் கோயிலை சுத்தம் செய்ய வைத்து மண் மீது அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தனியார் கல்லூரி நிர்வாகம் தங்கள் மாணவர்களை அனுப்பக்கூடாது என கேட்டுக்கொள்வதோடு வேண்டுகோளாகவும் வைக்கிறோம்' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!