வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (14/07/2018)

கடைசி தொடர்பு:11:10 (14/07/2018)

திருச்சியில் போட்டித்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம்!

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு உதவும் வகையில் திருச்சியில் இன்று (14.07.2018) இலவசப் பயிற்சி முகாமை நடத்துகிறது விகடன் பிரசுரம்.  

போட்டித்தேர்வு

தற்போது வேலை வாய்ப்புகள் அருகி வரும் வேளையில் நம்பிக்கை ஏற்படுத்துவது அரசு வேலைகள் மட்டுமே. இதனை மத்திய அரசு மற்றும் மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளின் மூலமே வெற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தத் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுவதற்கு உதவும் வகையில் பல்வேறு நகரங்களில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது விகடன் பிரசுரம். இதன் ஒருபகுதியாக திருச்சியில் இன்று (14-07-2018) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

இந்தப் பயிற்சி முகாமில், மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து திருச்சி மாநகரின் காவல் ஆணையர் அமுல்ராஜ் ஐ.பி.எஸ்-யும், போட்டித்தேர்வுகள் குறித்து நிறைய நூல்களை வெளியிட்டுள்ள டாக்டர் சங்கர சரவணன், போட்டித்தேர்வுகளை நுணுக்கங்கள் குறித்தும் பேச உள்ளனர்.

மேலும், இந்தப் பயிற்சி முகாமில் யு.பி.எஸ்.சி தேர்வுக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கும் எவ்வாறு தயாராவது என்பது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவன இயக்குநர் சங்கர் தேவராஜனும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியை எப்படி வசப்படுத்துவது என்பது குறித்து கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் இரண்டாம் இடம்பிடித்த மதுபாலனும் உரையாட உள்ளனர்.

இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள, அனுமதி இலவசம். கீழ்க்காணும் இணைப்பில் முன்பதிவு செய்துகொள்ளலாம். https://goo.gl/forms/2OW5cofguEXNKSQN2 மேலும் 044-6680 8019 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தும், 80560 46940, 73959 99467, 97899 77822 என்ற எண்ணில் அழைத்தும் அல்லது வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியும் முன்பதிவு செய்யலாம்.

போட்டித்தேர்வுகள் குறித்த சந்தேகங்களுக்கு நிபுணர்களின் பதிலைப் பெற தவறாமல் கலந்துகொள்ளவும்.