கரூரில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகம் - தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை!

கரூர் மாவட்டத்தில் அம்மா மருந்தகத்தை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திறந்து வைத்தார்.

தம்பிதுரை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், பள்ளபட்டியில் அம்மா மருந்தகம், நாகம்பள்ளி ஊராட்சி, வெங்கிடாபுரம் மற்றும் மலைக்கோவிலூர் பகுதிகளில் கூடுதல் வகுப்பறைக்கட்டடங்கள் ஆகியவற்றை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார்.


 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், பள்ளபட்டியில் அம்மா மருந்தகம், நாகம்பள்ளி ஊராட்சி, வெங்கிடாபுரம் பகுதியில் புதிய பள்ளிக்கட்டடம் மற்றும் மலைக்கோவிலூர் பகுதியில் 2 கூடுதல் வகுப்பறைக்கட்டடங்கள் ஆகியவற்றை நாடாளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் திறந்து வைத்து அம்மா மருந்தகத்தில் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள்.

கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மூலம் கரூர் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் கரூரின் மையப்பகுதியில் அம்மா மருந்தகம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதேபோன்று பள்ளபட்டி பகுதியிலுள்ள மக்கள் பயனடையும் வகையில் பள்ளபட்டியில் அம்மா மருந்தகம் துவக்கப்பட்டுள்ளது. இம்மருந்தகத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5,000 வகையிலான மருந்து வகைகள் உள்ளது. இதில் உயிர் காக்கும் மருந்து வகைகளும் உள்ளன. முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மருந்து வகைகளும் 15 சதவிகித தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டோர் டெலிவரி வசதி உள்ளது. இம்மருந்தகத்தில் மருந்து வகைகள் கூட்டுறவு மையக்கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாகம்பள்ளி ஊராட்சி மலைக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.13 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்களும், வெங்கிடாபுரம் பகுதியில் ரூ.13 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தையும் அப்பகுதி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!